பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 திருமுருகாற்றுப்படை விளக்கம் கிற்கலாம். அவன் விசுவரூபத்தைக் காண முடியாது. காண முயன்ருல் அச்சமே உண்டாகும். பல காலம் கண்ணளுேடு தோழளுகப் பழகி கின்ற அருச்சுனனே. அப்பெருமான் வசுவரூபம் எடுத்து கின்ற போது, "அப்பனே! அச்சமாயிருக்கிறது. இதை அடக்கிக் கொள்' என்று புலம்பினம்ை. ஆகவே, மிக்க திறல் விளங்கும் தன் விசுவரூபத்தை வானிலே உயரவிட்டு கிற்கும் முருகன், புலவன் தன் அடி கிழலே அடைந்து நிற்பதை அறிகிருன். தன் உயர்ந்த கிலே புலவஞல் அடைவதற். கரியது மட்டும் அன்று, அவனுக்கு அச்சத்தையும் உண் டாக்கும் என்பதை அறிந்து அதைச் சுருக்கிக்கொள்கிருன். இது அவனுடைய கருணையின் விளைவு. தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் கிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்கில தpஇ. (தெய்வத் தன்மை வாய்ந்த பராக்கிரமம் விளங்கு கின்ற உருவத்தோடு ஆகாயத்தை அளாவிய உயரத்தை உடைய முருகன் ங் உள்ள இடத்துக்கு வந்து அடைந்து, காண்பவருக்கு அச்சத்தைத் தரும் கெடிய கோலத்தை. அடக்கிக்கொண்டு, * - தெய்வத்தன்மை சான்ற திறலாவது. அகடிதகடன. சாமர்த்தியம்; இறைவன் எல்லாம் வல்லவன் அல்லவா? தழஇே-சுருக்கி: உள் அடக்கி..) சிலப்பதிகாரத்தில் இப்படி ஒரு செய்தி வருகிறது: சாத்தன் என்னும் தெய்வம் தன் இயல்பான பேருருவைக் காட்டினல் கண்டு அஞ்சுவாள் என்று தேவங்கி என்பவ. ளுக்கு அவள் கண் கொள்ளும்படியாக அழகிய திருவுருவத் தோடு வந்தாளும்.