பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் 343 'பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன் மூவா இளநலம் காட்டி.' (சிலப். 9:34-5) தன்னிடம் வந்தவனுடைய உள்ளப்பாங்கை அறிந்து அவனுக்கு ஏற்ற வகையில் முகமலர்ச்கியும் இன் சொல்லும் உடையவனாக அவனை அணுகி ஈவது வள்ளலுக்குரிய இலக் கணம். அகமும் முகமும் மலர்வது, வந்தவன் இங்கே உதவி கிடைக்கும் என்று கண்ட மாத்திரத்திலே மகிழும் பொருட்டு, முருகன் இந்த இலக்கணம் கிசம்பியவன் தன்னே காடி வந்தவன் தன் தோற்றத்தைக் கண்டு அஞ்சா மல் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பேராற்றல் உடைய பெருந்திரு உருவத்தை அடக்கிக் கொள்கிருன். அது மட்டுமா? வருபவன் கண்டு உள்ளம் உருகும்படியான திருக்கோலம் கொள்கிருன் இந்த இரண்டு திருவுருவும் அவனுக்கு அாாதி காலமாக உள்ளவை. ஒன்று பெருந்திரு வடிவம்; மற்முென்று எழில் திருவடிவம். ஒன்றில் ஆற்றல் தோன்றும்; மற்ருென்றில் அழகு தோன்றும். ஒன்றில்ை அச்சம் உண்டாகும்; மற்ருென்றில்ை அன்பு தோன்றும். ஒன்று மறத்தை அழிப்பது மற்ருென்று அன்பை வளர்ப்பது. ஒன்று மறக் கருணையின் வெளியீடு; மற்ருென்று அறக் கருணையின் விக்ளவு. ஒன்று துஷ்ட சிக்கிரகத்தின் பொருட்டு அமைவது; மற்ருென்று சிஷ்ட பரிபாலனத்துக்கு அமைந்தது. ஒன்று உக்கிரமூர்த்தி; மற்ருென்று சாந்த - மூர்த்தி. ஒன்று வீரம் காட்டுவது; மற்றென்று சரம் காட்டுவது. ஒன்று பகைவரை அச்சுறுத்துவது; மற்ருென்று அன்பருக்கு இனிப்பது. . இந்த இரண்டில் முன்னேயதை அடக்கிக் கொண்டு பின்னைய திருக்கோலத்தில் எழுந்தருகிருன் முருகன். இரண்டு கோலமும் ஒரு தாளின் இரு பக்கம் போன்றவை.