பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 திருமுருகாற்றுப்படை விளக்கம் இரண்டும் பழமையானவை; அகாதியாக உள்ளவை. அருள் புரிய வருகின்ற முருகன் சரத் திருக்கோலங்கொண்டு எழுந்தருளுகிருன். அப்போதுதான் அவனுக்கு முருகன் என்னும் திருநாமம் வந்ததற்குரிய காரணம் புலப்படுகிறது. அந்தத் திருக்கோலம் எவ்வாறு இருக்கும்? அதைச் சொல்ல வருகிருர் நக்கீரர். முருகுத் திருக்கோலம் முருகன் தன் முருகுத் திருக்கோலத்தைக் காட்டுகிருன். அது பழமையானது: அகாதியாக விளங்குவது. 'ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெரியேனே' என்பர் அருணகிரிகாதர். அந்தக் கோலம் எல்லாவற்றுக்கும் முதலில் இருப்பது எல்லாவற்றுக் கும் முடிவாகவும் இருப்பது. அந்தப் பழைய திருக்கோலத்தோடு முருகன் வருகிருளும், பண்டைத்தன் மணம் கமழ் தெய்வத்து இளகலம் காட்டி - மிகப் பழையதாகிய தன் அழகுத் திருவுருவத்தை முருகன் காட்டுகிருன். முருகன் என்பது முருகை உடையவன் என்ற பொருளே உடையது. முருகு என்பதற்குப் பலபொருள் உண்டென் பதைப் பார்த்தோம். அவற்றில் தலைமையானவை கான்கு. மணம், தெய்வத்தன்மை, இளமை, அழகு என்பவை அவை. நக்கீரர் இந்த கான்கையும் சிறப்பாக எடுத்துச் சொல்கிருர், முருகன் தன்னை நாடி வந்த புலவனுக்கு மணங்கமழ் கோலத்தைக் காட்டுகிருன்; தெய்வத் திருக் கோலத்தைக் காட்டுகிருன்; இளமை உருவத்தைக் காட்டு கிருன்; எழில் கலம் கிரம்பிய வடிவத்துடன் எழுந்தருளு