பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் - 345 இருன். 'மணம் கமழ் தெயவத்து இளகலம்' என்ற சொற்களில் இந்த இயல்புகளைக் காணுகிருேம், - முருகன் இருக்கும் இடமெல்லாம் மணம்கமழும். அவன் வாழும் குறிஞ்சி கிலம் மலர்கள் நிரம்பியது. அவற்றின் மணம் எங்கும் விரவியிருக்கும். அவனுடைய திருக் கோயிலில் வேலனும் ஆடும் மகளும் மலர்களைக் கொணர்ந்து பூசை போடுவார்கள். அங்கும் மலர் மணம் கிரம்பியிருக்கும். மலர்கள் கிரம்பிய இடத்தை வருணிக்கும் போது, 'இது வெறிக்களத்தை ஒத் திருக்கிறது” என்று சொல்வது சங்க காலப் புலவர்களின் வழக்கம், முருகனுக்குப் பூசை செய்து ஆடும் ஆட்டத்தை வெறியாட்டு என்றும், பூசை போடும் இடத்தை வெறிக்களம், வெறியயயர் களம் என்றும் சொல் வார்கள், முருகனே வழிபடும் இடங்களிலெல்லாம் மலர்கள் மிகுதியாக இருக்கும் என்பது இதனும் புலகுைம். முருகனும் செஞ்சாந்து அணிந்து பல மலர்மாலேககள அணிந்து விளங்குகிறவன். அதனுல் அவன்பால் நறுமணம் மவிந்து தோன்றும். அன்றியும் இயற்கையான தெய்வீக மனம் உடையவன் அவன். 'கந்தமுறு நின்மேனி காணுத கயவர்கண் கலநீர் சொரிந்த அழுகண்' என்று அருட்பிரகாச வள்ளலார் பாடுவார். இவற்றையன்றி ஞானமே திருமேனியாகிய அவனிடம் ஞான மணம் வீசும், ஞானத்தை மனமென்று கூறுவது ஒரு வழக்கு. * * : * 'ஒருஞான வாசம் வீசி' என்பது திருப்புகழ். மலர் மண மும் திவ்ய கந்தமும் ஞான வாசனையும் ஒருங்கே வீசும் முருகன் திருக்கோலம்