பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பிறந்த கதை பாண்டிய அரசன் மாலே நேரத்தில் தன்னுடைய அரண்மனையின் மேல்மாடத்தில் அமர்ந்திருந்தான். அப்போது ஒரு நறுமணம் அவனுடைய மூக்கில் பட்டது. அந்த மணத்தைத் தென்றல் தாங்கி வந்தது என்பதை அவன் உணர்ந்தான். அது அவனுக்குப் புதிய வகையான மணமாகத் தோன்றியது. அவன் பலவகை மணமலரைத் தெரிந்தவன்; வாசனைத் திரவியங்களே கன்ருக நுகர்ந்தவன். இந்த மனமோ அவன் அறிந்த மணங்களுக்குள் ஒன்ருக இராமல், புதியதாக இருந்தது. இந்த மணம் எங்கேயிருந்து வருகிறதென்று திரும்பிப் பார்த்தான். அரண்மனையின் வேறு ஒர் கோடியில் தன்னுடைய பட்டத்துத்தேவி தலையை ஆற்றிக்கொண்டு கின்றிருப்பதைக் கண்டான். அவளுடைய கூந்தலிலிருந்து வந்த மணந்தான் அது என்பதை உணர்ந்து கொண்டான். கூந்தலுக்கு மலராலும், தைலத்தாலும் மணம் ஏறுவது. உண்டு. ஆனல் இந்த மணமோ செயற்கையில் ஊட்டிய தாக இல்லாமல் கூந்தலுக்கே உள்ள இயற்கையான மணம் போலத் தோன்றியது, அப்போது பாண்டியன் உள்ளத்தில் கிளுகிளுப்பு உண்டாயிற்று. தன்னுடைய மாதேவியின் கூந்தல் இயற்கையில் மணமுடையதாக இருக்கிறது என்ற விக்னப்பினல் உண்டான கிளுகிளுப்பு அன்று. இறைவ. லுடைய படைப்பில் நல்ல மகளிர்களுடைய கூந்தலுக்கு இயற்கை மணம் அமைந்திருக்கிறது என்ற உண்மையை அறிந்ததனல் அந்தக் கிளுகிளுப்பு அவனுக்கு