பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 - திருமுருகாற்றுப்படை விளக்கம். மணம் நிரம்பியது என்று சொல்வதில் மிகை ஏதும் இல்லை. அதனால் அதை 'மணம் கமழ் கோலமாகச் சொல்கிருர் நக்கீரர். அடுத்துத் தெய்வத்தன்மை வாய்ந்த கோலம் என்கிரு.ர். தெய்வத்தின் தன்மை யாது? அருளே தெய்வத்தின் தன்மை. அருள் வேறு, அவன் வேறு என்று பிரிக்க வொண்ணுதா யினும் விவகாரத்தில் அப்படித் தனித்தனியே சொல்லி அது. பவிப்பது பக்தர்களுக்கு இயல்பு. 'நீமறந்தா யெனினும் இவ் வகிலமெலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே’’ என்று அருட்பிரகாச வள்ளலார் பாடுவதைக் காண்க. தெய்வத்தினிடம் உள்ள அருள் தன்மை கண்டே. அன்பர்கள் அடைந்து போற்றுகிருர்கள். முருகனிடம் அந்த அருள் மிகுதியாக இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் தனு கரண புவன போகங்களைத் தந்து பாதுகாப்பது இறைவன் திருவருள். அது பொது, வானது. தன்னே வழிபட்டு உருகும் அன்பர்களின் பக்குவம் அறிந்து இன்பம் வழங்கும் அருள் சிறப்பான அருள். தன் குழந்தைகள் எல்லோருக்கும் உணவு அளிக்கிருள் தாய்;. அது பொதுவான அன்பு, இளங்குழந்தையை எடுத்து அணேத்து முத்தமிடுகிருள். அது சிறப்பான அன்பு. அது போன்றே இறைவனுடைய பொதுவருளும் சிறப்பருளும் இருக்கின்றன. சிறப்பருளினும் சிறந்த பேரருள் ஒன்று உண்டு, தன்சீனப் பகைத்தவனுக்கும் கலம் செய்யும் கருணே لم يخ الإلكيه முருகன் அந்தப் பெருங்கருணை உடையவன். தன்னைப் பகைவகைக் கருதிப் போரிட்ட சூரபன்மளே மயிலும் சேவலுமாக்கி ஆட்கொண்டான். போர்க்