பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் 347" களத்தில் தன்னுடைய விசுவரூப தரிசனத்தை அவ்: வசுரனுக்கு அளித்தான். அது கண்டு உருகிய குரனே, "இப்பெருமான் போரென்று ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு எனக்கு அருளல்லவா செய்ய வந்திருக்கிருன்?" என்று சொல்லி வியப்படைகிருன். 'அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி லுைம் கண்ணின லடங்கா துன் னிற் கருத்தின லடங்கா தென்பால் நண்ணினன் அமருக் கென்கை அருளென நாட்ட லாமே” என்கிருன். அருளென நாட்டலாமே என்று உறுதியாகக் கூறுகிருன். இது முருகனுடைய பேரருள் திறத்தை ான்கு எடுத்துக் காட்டும். - அருளின் மிகுதியை, கருண கூர்வதை, "கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும்” என்று பாராட். டுவார் கந்தபுராண ஆசிரியர். கூர்தலாவது உள்ளது: சிறத்தல். அடுத்தபடி வருவது அவனுடைய இளமை, அவன் என்றும் மாயாத இளமையை உடையவன். 'என்று மகலாத இளமைக்கார' என்பது திருப்புகழ். என்றும் பொன்ருத இளமையை” உடையவனதலால் அவனைப் பிள்ளையார் என்று பழங்: தமிழுரைகள் கூறுகின்றன. தெய்வத் திருக்கூட்டத்தில் அவன் இளையவன். சிவபிரானுடைய மக்களுள் இளையவன்.