பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் 349." தியதால் வந்த இத்திருகாமம் பிறரால் பெறுவதற்கரியது, என்று முன்பே நக்கீரர் கூறினர். 'அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக' என்று கூறியதை முன்பே பார்த்தோம். இத்தகைய மணமும் அருளும் இளமையும் அழகும் இணைந்து கண்ணேயும் கருத்தையும் கவ்வும் அற்புதக் கோலத்தைத் தரிசிக்கும்படி முருகன் புலவனுக்குக் காட்டு . வானம். பண்டைத்தன் மணம்கமழ் தெய்வத்து இளகலம் காட்டி. அன்பு மொழி கண்குளிர இந்தக் கோலத்தைக் காட்டும்போதே காது குளிர அன்பு கிரம்பிய மொழிகளே முருகன் கூறுவாளும். - சாமானிய அதிகாரி ஒருவனேக் கண்டாலே மக்களுக்கு அச்சம் உண்டாகிறது. தேவாதி தேவனும் சர்வ சக்தி மானும் ஆகிய முருகனைக் காணும்போது முதலில் யாருக்குமே அச்சம் உண்டாகும். காம் எத்தனையோ குற்றங்களைச் செய்திருக்கிருேமே!’ என்ற நினைவு வரும். 'நமக்கு இறைவன் அருள் செய்வான? அதற்குரிய தகுதி நமக்கு இருக்கிறதா?’ என்றெல்லாம் எண்ணி அஞ்சும் கிலே உண்டாகும். பிரபஞ்சத்தில் உழன்று பட்ட துன்பங் களெல்லாம் நினைவுக்கு வரும். உடம்பு நடுங்கும். வாய் குழறும். இதைக் கருணுகிதியாகிய முருகன் உணர்வான். "பயப்படாதே அப்பா!' என்று முதலில் அபயம் அருள் வான். அது மட்டுமா? போன புலவன், கப மை இவன்