பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 திருமுருகாற்றுப்படை விளக்கம். சிவன் முத்தி அந்தப் பரிசில் யாது? இறைவனேயன்றி வேறு. யாராலும் தருவதற்கரிய முத்தியே அப்பரிசில். முத்தியிலும் இருவகை உண்டு; ஒன்று சீவன் முத்தி; மற்ருென்று விதேக முத்தி. இந்த உடம்பு உள்ளபோதே முத்தியின் பத்தை நுகர்ந்து வாழ்வது சீவன் முத்த கிலே; உடம்பை விட்ட பிறகு பெறுவது விதேக முத்தி. முருகன் தன்னை அண்டி வழிபட்ட அன்பனுக்கு உடனே பரிசிலேத் தருவான்; உடம்பை விடச்செய்து விதேக முத்தியை அருள்வது. அன்று; உடம்பு இருக்கும்போதே பசுகரணங்களெல்லாம் பதிகரணமாக மாறப்பெறும் சிவன் முத்தியைத் தருவான். ஈடும் எடுப்பும் இல்லாத கிலே அது, இந்த உலகத்தைச் சுற்றியிருக்கும் கடல் கருமையாக இருளின் நிறத்தைப் படைத்திருப்பது; சூரியன் முதலிய சுடர்கள் இல்லாதபோது உலகமே இருளில் மூழ்கிக்கிடப் பது. மாயிருள் ஞாலம் அல்லவா? இதன் அகத்திலும் இருள்: புறத்திலும் இருள் கிறக்கடல். அகம்புறமென்னும் இரண் டிடங்களிலும் இருள் நிரம்பிய உலகத்தில் வாழும் பொழுதே ஒளி படைக்கும்படி அருள் செய்வான் முருகன். என்றும் இறவாத பெருகிலேயை, மரணமிலாப்பெரு வாழ்வை, அவன் வழங்குவான். நமக்குச் சமானம் யாரும் இன்றி, நாமே தனித் தலைவராகத் தோன்றும் வகையில் இன்பம் அருளுவான். மற்ற வள்ளல்களிடம் சென்ருர் யாரும் இத்தகைய பரிசிலப் பெருதவர்களாக கிற்க, முருகனை அடைந்தவன் மட்டும் மற்றவரோடு சேராமல் தனியே சிறந்து கின்று தோன்றும்படி அப்பெருமான் திருவருள் பாலிப்பான். -