பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் Y 353 விளிவின்று இருள்கிற முந்நீர் வளைஇய உலகத்து ஒரு ஆகத் தோன்ற, விழுமிய பெறலரும் பரிசில் கல்குமதி. (இருளின் நிறத்தைப் பெற்ற கடல் வளைந்து குழ்க்க உலகத்தில் என்றும் அழிவே இல்லாமல், நீ ஒருவனே தலைவனுகத் தோன்றும்படி எல்லாவற்றுக்கும் மேலான வேறு எங்கும் பெறுவதற்கு அரிய பரிசிலாகிய சீவன் முத்தியை அருளுவான். விளிவு-அழிவு. இன்று-இன்றி. விளிவின்று ஒரு ஆகத் தோன்ற என்று கூட்டவேண்டும். முந்நீர்-கடல்; ஆக்கல். அளித்தல், அழித் தல் என்ற மூன்று இயல்புகளே யும் உடைமையால் இப்பெயர் அமைந்த தென்றும், ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் என்ற மூன்று நீர்களையும் உடைமையால் அமைந்ததென்றும் கூறுவர். வளைஇய - வளைந்த ஒரு ஆக-ஒப்பற்ற நீயேயன்றிப் பிறர் யாரும், இல்லை ஆக. விழுமிய-விழுப்பமான சிறந்த நல்குமதிகொடுப்பான். மதி என்பது பெரும்பாலும் முன்னிலை யோடுதான் வரும்; இங்கே அருமையாகப் படர்க்கையோடு வந்தது ) - "இருண்ட நிறத்தையுடைய கடல் சூழ்ந்த உலகத் திடத்தே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியை யாய்க் கேடின்றித் தோன்றும்படி, சீரிய பிறராற் பெறுவ தற்கரிய வீடுபேற்றினத் தருவன்' என்று நச்சினர்க் கினியர் உரை கூறினர். ஞானம் பெற்ற சிவ ன் முக்தர்கள் தம்மை அண்டியவர்களின் அறியாமையை மாற்றி ஞானம் வழங்கி வீடு பெறச் செய்யும் இயல்பை உடையவராவதை எண்ணி, பிறர்க்கு வீடளிததற்கு உரியையாய் என்று அவர் கூறினர். திரு-23