பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 திருமுருகாற் றுப்படை விளக்கம் "பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து முத்தி கொடுக்க முறை” என்று இறைவன் உமாபதி சிவாசாரியாரைப் பணித்ததாக ஒரு வரலாறு உண்டு. அதை இங்கே எண்ணிப் பார்த்தால் இவ்வியல்பு புலகுைம். "இனி மதி பலவுடன் எனக் கூட்டி, அறிவுகள் பல வுடனே பரிசில் நல்கும் என்று கூறுவாரும் உளர் என்று வேறு ஒரு சாரார் உரையையும் கச்சினர்க்கினியர் எடுத்துக் காட்டி అ . மரணமில்லாப் பெருவாழ்வு சங்ககாலப் புலவர் நக்கீரர்.வேதங்களும் வேதமுடிவாகிய உபநிடதங்களும் தமிழ் காட்டில் அக்காலத்திலும் பெருக வழங்கி வந்தன. கடவுட் கொள்கையும் முத்தி நெறியும் சிவன் முத்தியைப்பற்றிய கருத்துக்களும் அந்தப் பழங் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு உரியனவாக இருந்தன. வேதம், "அம்ருதம் இஹபவதி' என்று சொல்கிறது; இவ் வுலகத்திலேயே சாவாமையைப் பெறலாம் என்கிறது. இந்த உடம்போடு என்றும் இருக்கும் கிலேயன்று அது இந்த உடம்பில் இருக்கும்போதே முத்தியின்பத்தை அ.ை யும் கிலே. மரணமிலாப் பெருவாழ்வு என்பது அதுதான், ஏனையோர் மரணம் அடைவது ஒருடம்பை விட்டு மற்ருேர் உடம்புக்குப் போகும் பயணம். அது சிறை மாற்றம் போன்றது. சீவன் முத்தர்கள் காலமாவது மரணம் அடைவதாகாது. அவர்கள் இந்த உடம்பை விட்டால் கேரே வீடு அடைகிருர்கள்; பூரணம் அடை கிருர்கள். அதல்ை ஞானிகள் உடல கீத்தால் சித்தியடைந்தனர் என்றும், பூரணமடைந்தனர் என்றும் கூறுகிருேம். அவர்கள் உடம்பை விடுவது, கைதி