பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் 355 சிறையினின்றும் விடுதலே பெறுவது போன்றது. மற்ற வர்கள் உடம்பை விடுவது பிறிதொரு சிறைக்குப் போவ தற்காக முன்பே இருக்கும் சிறையை விடுவது போன்றது. அதுதான் மரணம். இனி இங்கே வந்து பிறவாமல் ஜீவயாத் திரை சிறைவடைய இந்தச் சரீரத்தை உதறிவிட்டுப் போகும் ஞானியர் மரணம் அடைவதில்லை; அவர்கள் பரிபூரணம் அடைகிருர்கள். அவர்கள் இவ்வுடம்பில் வாழும் வாழ்வு மரணமிலாப் பெருவாழ்வு. நக்கீரர் சொல்கிற, விளிவின்று ஒரு யோகத் தோன்ற என்று கூறும் நிலையும் அதுதான். +. இந்த உடம்பு இருக்கும் போதே முத்திகிலே கூடும் என்பதைச் சங்க நூல்களில் வேறிடத்தும் காணலாம். 'தவம்செய் மாக்கள் தம்உடம்பு இடாஅது அதன்பயம் எய்திய அளவை மான' என்று பொருநராற்றுப்படையில் வருகிறது. 'தவம் செய்யும் ஞானிகள் தம் உடம்பைக் கீழே போட்டு விடா மலே அந்தத் தவத்தின் பய கிைய முத்தியின்பத்தை அடைந்த முறையை ஒப்ப' என்பது இதன் பொருள். இதல்ை உடம்பை விடாமலே அந்த இன்பத்தை அடையும் கிலே ஒன்று உண்டு என்பது புலகுைம். அதுவே சிவன் முத்திகிலே. . 'நன்ருய் ஞானம் கடந்துபோய் நல்இந் திரியம் எல்லாம்.ஈர்த்து ஒன்ருய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை உணர்ந்துணர்ந்து சென்ருங் கின் பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசைஅற்ருல் அன்றே அப்போ தேவீடாம்: - அதுவே விடு வீடாமே”