பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பிறந்த கதை 23 உண்டாயிற்று. உடனே இறைவன் திருவருளே எண்ணி வியந்தான். பத்மினி சாதிப் பெண்களுக்கு இயற்கை யாகவே உடம்பில் ஒரு தனி மணம் இருக்கும் என்றும், அவர்களுடைய கூந்தலும் இயற்கை மணம் உடையது என்றும் நூல்கள் கூறுகின்றன. அந்த உண்மையை இதுகாறும் பாண்டியன் அநுபவத்தில் உணரவில்லே. இப்பொழுது அதனேத் தெளிவாக உணர்ந்து கொண்டான். ஆண்டவனுடைய படைப்பில் இப்படி ஒரு வியப்பான உண்மை நிலவுவதை உள்ளத்தால் உணர்ந்தவுடன் அதனே யாவரும் அறியச் செய்ய வேண்டு மென்ற அவா பாண்டி யனுக்கு எழுந்தது. தன்னுடைய மனையாளின் கூந்தல் மணமுடையதாக இருக்கிறது என்பதைப் பிறர் அறியச் செய்யவேண்டுமென்று அவன் எண்ணவில்லை. இயற்கையில் கல்ல மங்கையர்களுடைய கூந்தலில் இறைவன் நறுமணத் தைப் படைத்திருக்கிருன் என்ற உண்மையை உலகம் அறிய வேண்டுமென்பதே அவன் ஆர்வம். எப்படி அறிவிப்பது? குறிப்பாக இதனை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளவர் யார்?' என்று சிந்தனை செய்தான். பாண்டியனுடைய ஆதரவில் மதுரையில் - தமிழ்ச் சங்கம் இருந்தது. அதில் 49 புலவர்கள் இருந்து தமிழை ஆராய்ந்தார்கள். நக்கீரர் முதலிய புலவர்கள் சங்கத்தில் இருந்து பல நூல்களே இயற்றியும், நூல்களை இயற்று வாருக்கு ஆதரவு தந்தும் வந்தார்கள். பாண்டியனுக்கு அந்தச் சங்கத்துப் புலவர்க்ளின் வினவு வந்தது. உடனே அப் புலவர்களை அழைத்து, "ஒரு நறுமணத்தை மாலையில் கான் நுகர்ந்தேன். அதைப் பற்றி நீங்கள் பாடவேண்டும்' என்று குறிப்பாகச் சொன்னன்.