பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 திருமுருகாற்றுப்படை விளக்கம் என்று நம்மாழ்வார் கூறும் கிலேயும் இதுவே என்று தோன்று. கிறது. 3 ...” - மாங்குடி மருதனர் என்னும் புலவர் மதுரைக் காஞ்சி' என்ற நூலேப் பாடியிருக்கிருர். திரு முருகாற்றுப் படையை முதற் பாட்டாகக் கொண்ட பத்துப் பாட்டில் ஆருவது: பாட்டாக அமைந்திருப்பது அது. மதுரை மாநகரில் உள்ள மக்களின் இயல்புகளையும் அவர்கள் வாழும் இடங்களேயும் பற்றி விரிவாக வருணிக் கிருர் அவர். அங்கே, - 'நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி உயர்நிலை உலகம் இவணின் றெய்தும் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற், பெரியோர்’ என்று ஒரு வகையினரைப் பற்றிக் கூறுகிருர். 'கால்வகை விலங்கள் அமர்ந்த உலகத்தே ஒன்ருகிய பிரமம் தாங்களே யாய், உயர்ந்த கிலேமையையுடைய தேவருலகத்தை, இவ்வுலகிலே கின்று சேரும், தருமத்தின் வழி ஒரு காலமும் தப்பாத பல்லுயிர்கட்கும் அன்புடைத்தாகிய நெஞ்சாலே, சீவன் முத்தரா யிருப்பார்’ என்று கச்சினர்க்கினியர் உரை வகுத்தார். ஒருதாம் ஆகி உயர் கிலே உலகம் இவனின் றெய்தும்...பெரியோர்' என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். திருமுருகாற்றுப்படையில் 'உலகத்து ஒரு.ே யாகித் தோன்ற என்று வரும் பகுதியிலுள்ள சொல் நடை. யோடு அது ஒத்திருப்பதை உணரலாம். உயர்நிலை உலகம் என்பதற்குத் தேவருலகம் என்று கச்சினர்க்கினியர் பொருள் உரைத்தாலும், "எல்லாவற்றினும் உயர்ந்த கிலேயாகிய விட்டுலகம் என்று பொருள் கொள்வதே சிறப்பு. வீட்டை வரனென்னும் வைப்பு' என்றும், "வானேர்க்குயர்ந்த வுலகம்' என்றும் திருவள்ளுவர் கூறுவதலுைம் இதனை உணரலாம், "இங்கே இருந்தபடியே உயர்நிலை உல்கமாகிய