பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் 357 முத்தியநுபவத்தை அடையும் பெரியோராகிய சீவன் முத்தர்' என்று பொருள் கொள்வதற்குரியது. முன்பு காட்டிய மதுரைக் காஞ்சிப் பகுதியில் அவர்கள் ஒரு தாம் ஆகித் தோன்றுபவர்கள். இங்கே பெறலரும் பரிசில் பெறும் புலவனும் ஒரு யாகத் தோன்றி சிற்பான். எனவே, இங்கே குறிப்பிட்டது. சீவன் முத்த கிலே என்று சொல் வதில் தவறு இல்லே. முருகனே வழிபட்டு அன்பு செய்யப் புகுந்தவன் ஒருவன், அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலங் களுக்குச் சென்றும், அவனுடைய சைதன்யம் பொருந்தி யிருக்கும் இடங்களுக்குச் சென்றும் யாத்திரை செய்து, அதனால் உள்ளம் தெளிவடைந்து பக்குவம் பெறும்போது, முருகன் தன் காட்சியை அப்போது அவ்விடத்தில் காட்டிச் சிவன் முத்த கிலேயை அருளுவான் என்பது இதுவரையிற் கூறியவற்ருல் தெளிவாகிறது. "பெறலரும் பரிசிலேத் தருவான்; அப்படித் தருபவன் பழமுதிர்சோலை மலைகிழவோன்' என்று இந்த வாக்கியத் துக்கு எழுவாயை வைப்பவர் போல மற்ருெரு படை வீட்டை யுடையான் என்பதைப் புலப்படுத்துகிருர் கக்கீரர்.