பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர் சோலைமலை பழமுதிர்சோலை மலைகிழவோனேச் சொல்ல வரும் ாக்கீரர் அந்த மலேயின் இயற்கையெழிலே விரிவாகச் சொல். கிருர், அந்த மலைக்கு உரியவன் என்ற அளவிலே முருகனைக் குறிப்பிடுகிருர், - - - பழமுதிர் சோலேமலே வளத்தைக் கூறும்போது தனித்: தனிக் காட்சியாக்ச் சொல்லாமல் எல்லாவற்றையும் ஒரு. தொடர்பு உண்டாகும்படி அமைத்துக் காட்டுகிருர், மலையின் மேலிருந்து கீழே இழிந்துவரும் அருவியை வருணிக் கத் தொடங்கி, அது வரும் வழியில் கிகழ்வனவற்றைச் சொல்லும் முறையில் படிப்படியாக அந்த அந்த இடங்: களில் உள்ள மரங்களையும் விலங்குகளையும் பறவைகளையும் காட்டுகிருர், திருமுருகாற்றப்படையில் வரும் முதலாவது படை வீடாகிய திருப்பரங்குன்றத்தின் எழிலேச் சொல்லும் போது வண்டைத் தொடர்புபடுத்தி, அது வயலில் தாமரையில் துஞ்சி விடிந்தவுடன் கீழிருந்து மேலே சென்று இன்பம் துய்ப்பதாகச் சொல்லும் முன்றயில் அந்த அழகைப் புலப்படுத்துகிருர். இங்கே மேலிருந்து கீழே. வரும் அருவி ோடு நம்மை அழைத்துச் சென்று. இடையிடையே நிகழும் காட்சிகளைக காட்டுகிருர். தொடக்கத்தில் ஏறும் வண்டை வைத்து இயற்கையை வருணிக்கும் நக்கீரர் இறுதியில் இறங்கும் அருவியைக் கொண்டு மலையின் எழிலே விரிக்கிருர். இது ஓர் அழகான உத்தி, -