பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவியின் தோற்றம் மலேயின் உச்சியிலே அருவியின் மூலமாகிய சிறு சிறு பகுதிகள் இருக்கின்றன. அவையெல்லாம் திரண்டு ஒன்ருகிப் பேரருவியாக வீழ்கின்றன. அந்தச் சிறிய சிறிய அருவிகள் வெள்ளே வெளேரென்ற துணியாலான கொடிகள் அங்கங்கே அசைவது போலத் தோற்றுகின்றன. இக்த உயரத்திற்குக் கீழே அருவி பெருந்தாரையாகி வேகம் பெற்று இழியத் தொடங்குகிறது. - - - பலவுடன் - வேறுபல் துகிலின் நுடங்கி, (பல சிறிய அருவிகள் ஒருங்கே பலவேறு துணிக்: கொடிகளைப் போல வளைந்து அசைந்து. துகில்-கொடி நுடங்கி - அசைக்து.)

மரங்கள் இப்போது அருவி கீழ்நோக்கி வருகிறது. அருகிலுள்ள பொருள்களேயெல்லாம் அடித்துக் கொண்டு வருகிறது. மலையின்மேல் அகில் வளர்ந்திருக்கிறது. சக்தன மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. இரண்டும் மணமுள்ள பொருள்கள். மிகவும் உயரத்தில் உள்ளவை இவை. அகிலப் பறித்து அருவி சுமந்து கொண்டு வருகிறது. சந்தன மரங்களின் அடிகளேயெல்லாம் விழ்த்தி உருட்டிக்கொண்டு வருகிறது. அந்த விலக்குக் கீழே பல ஆண்டுகளாக மூங்கில்கள் வளர்ச் திருக்கின்றன; ஆழமாக வேரூன்றி யிருக்கின்றன; மலர் களேத் தாங்கியபடி மெல்ல அசைகின்றன. அந்த மூங்கில் களை மோதி உலுக்குவதால் பூக்கள் உதிர்கின்றன. மூங்கில் களேயே வேரோடு பறித்துக் கொண்டு வருகிறது அருவி. அகில்சுமந்து, - ஆர முழுமுதல் உருட்டி, வேரல் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு.