பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 திருமுருகாற்றுப்படை விளக்கம் [அகில் கட்டைகளைச் சுமந்து, சந்தன மரத்தின் அடிப் பாகத்தை உருட்டி, சிறு மூங்கிலின் பூவையுடைய அசை கின்ற கொம்பு பூவில்லாமல் மொட்டையாகும்படி, அதன் வேரைப் பிளந்து. ஆரம்-சந்தனம். முழுமுதல்-அடிமரம், வேரல்-சிறு மூங்கில். அலங்கு-அசையும். சினே-கிளே. புலம்ப-மவர் இல்லாமல் தனியாக இருக்க ) மலர் கிறைந்த சூழ் கிலே இது. மக்கள் அதிகமாக கடையாடாத இடம். இங்கே மலைப் பக்கத்தில் பெரிய பெரிய தேனடைகள் இருக்கின்றன. வானளாவிய உயர்ந்த மலேப்பகுதிகள் அவை. வட்ட வட்டமாக உள்ள அந்தத் தேனடைகளில் தேன் சிரம்ப உள்ளது. ஆதலால் சிவப்பாக இருக்கின்றன. அவை சூரிய மண்டலத்தைப் போலக் காட்சி அளிக்கின்றன. குளிர்ந்த மணம் கிரம்பிய தேன் அவற்றில் இருக்கின்றது. அருவி விழுகிற வேகத்தில் அதன் நீர்வீச்சு அந்தத் தேனடைகளின்மேல் மோதுவதல்ை அவை சிதைகின்றன. தேனும் அருவியிலே வீழ்ந்து கலக்கிறது. - - விண்பொரு நெடுவரைப் பருதியின் தொடுத்த தண்கமழ் அலர் இருல் சிதைய, (வானே முட்டுகின்ற உயர்ந்த மலைப்பக்கத்தில் வண்டு கள் அடை அடையாக வைத்த குளிர்ந்த நறுமணம் வீசிப் பரவியிருக்கும் தேனடைகள் சிதைய. - பொரு-முட்டும். நெடுவரை-உயர்ந்த மலேப்பக்கம். பருதியின்-சூரியனேட்போல. அலர் - விரிந்து பரந்த, இருல்-தேனடை) மணமுள்ள பொருள்களும் சுவையுள்ள பொருள் களும் அருவியிலே கலந்து வருகின்றன. அங்கே மலேக் காடுகளில் வெவ்வேறு மரங்கள் ஓங்கித் தழைத்து