பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர் சோலைமலை 361 வளர்ந்திருக்கின்றன. ஒரு பக்கம் ஈரப் பலா மரங்கள் முதிர்ந்த கனிகளுடன் கிற்கின்றன மற்ருெரு பக்கம் சுரபுன்னே மரங்கள் நிரம்பப் பூத்துக் குலுங்குகின்றன. இந்த அருவி பலா மரத்தை மோதிப் பழுத்து வெடித்த பழங்களிலிருந்து சுளைகள் உதிர்ந்து விழச் செய்கின்றது. அவை அருவியிலே கலக்கின்றன. சுரபுன்னேயின் மேல் மோதி அதிலுள்ள மலர்களே உதிர்க்கின்றது. அந்த மலர்களும் அருவியிலே வருகின்றன. கன்பல ஆசினி முதுகளை கலாவ, மீமிசை காக நறுமலர் உதிர. (கல்லனவாகிய பல ஈரப் பலாக்களின் முதிர்ந்த சுளேகள் உதிர்ந்து கலக்கவும், மேலே உள்ள சுரபுன்னே யின் மணம் வீசும் மலர்கள் உதிரவும். ஆசினி - ஈரப்பலா. கலாவ-கலக்க. நாகம்-சுரபுன்னே..) விலங்குகள் மரங்களேயும் தேனடைகளையும் சிதைத்து வரும் அருவி பின்னும் கீழே இறங்கி வரும்போது அங்குள்ள மரங்களில் இருக்கும் குரங்குகள் அஞ்சுகின்றன. உடம்பு முழுவதும் கருமையான குரங்குகளும், முகம் மாத்திரம் கருமையாக இருக்கும் குரங்குகளும் மரத்துக்கு மரம் தாவி விளேயாடுகின்றன. அருவி வேகமாக வரும்போது அதன் திவலைகளும் துளிப் படலமும் தம்மேல் வீசுவதனல் அந்தக் குரங்குகள் நடுங்குகின்றன. அங்கே யானைகள் உலாவுகின்றன. அவற்றின் முகத்தில் பொறிப் பொறி யாகப் பூவைப் போன்ற புள்ளிகள் இருக்கின்றன. கருமையான பெண் யானைகள் அருவி வீசும் துளிகளால் குளிர் அடைந்து கடுங்குகின்றன.