பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 திருமுருகாற்றுப்படை விளக்கம்: யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி. (கருங் குரங்குகளோடு கரிய முகத்தையுடைய ஆண் குரங்குகள் கடுங்கவும், பூவைப் போன்ற புள்ளிகளே யுடைய கெற்றியையுடைய கரிய பெண்யானைகள் குளிர்ச்சி அடையும்படியும் வீசி. யூகம்-கருங்குரங்கு. மாமுகம் - கரிய முகம். முசுஒரு வகைக் குரங்கு. கலை-ஆண். பனிப்ப- ஒடுங்க. இரும் பிடி-கரிய பெண்யானை. குளிர்ப்ப-குளிர்ச்சி’ அடையும்படி.) அங்கங்கே ஆண் யானைகள் இறந்துபட்டதனல் அவற்றின் தந்தங்கள் கிடக்கின்றன. பல காலம் வாழ்ந்த யானைகளின் தந்தங்களாதலின் அவை முதிர்ந்து. முத்துடையனவாக இருக்கின்றன. முத்துப் பிறக்கும். இடங்களில் யானேயின் தந்தமும் ஒன்று. அந்தத் தந்தங்களே அல்லத்துக் கொண்டு வருகிறது அருவி. மலேயில் பலவகை மணிகள் பிறக்கும், மலதரு மணியே' என்று சொல்வது வழக்கு. அந்த மணிகளையும் அலசிக் கொண்டு அருவி வரும்போது அவை பளபளக்கின்றன: அவற்றின் வண்ணங்கள் எடுப்பாகத் தெரிகின்றன. மலேகளில் பொன்னும் கொடி கொடியாகப் பாறையி: னிடையே ஒடிக் கிடக்கும். அருவி வேகமாகப் பாறையி: னுடே வரும்போது அந்தப் பொன்னேயும் அரித்து வருகிறது. பொன்னின் பொடியைக் கொழித்துக் கொண்டு. வருகிறது. - மணமுள்ள பொருள்களும் சுவையுள்ள பொருள் களும் அருவியிலே சேர்ந்து வருகின்றன என்பதைப்