பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர் சோலமலை - - 363, பார்த்தோம். இப்போது மதிப்புள்ள பொருள்களையும் அருவி இழுத்துக் கொண்டு வருகிறது. முத்துடைய தந்தத் தையும் மணியையும் பொன்னேயும் அல்லவா அடித்துக் கொண்டு வருகிறது? 'இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ" என்பதில், இறைவனேப் பாடும் அப்பர் சுவாமிகள் மதிப் புடைய பண்டங்களாக அவன் இருப்பதைப் பொன், மணி, முத்து என்று கூறிப் புலப்படுத்துகிருர். அந்த மூன்று. அரும் பண்டங்களையும் அரித்துக் கொண்டு வருகிறது. அருவி. - பெருங்களிற்று முத்துடை வான்கோடு தpஇத் தத்துற்று நன்பொன் மணிகிறம் கிளரப் பொன்கொழியா. (பெரிய ஆண்யானைகளின் முத்தையுடைய வெண்மை யான தந்தங்களை வாரிக்கொண்டு, குதித்து,கல்ல பொன்னும் மணியும் தம் நிறம் கன்முக ஒளிரும்படி செய்து, பொன்னேக் கொழித்துக் கொண்டு. - - வான்கோடு- வெள்ளைத் தந்தம். தழஇே-தழுவி;: இழுத்துக் கொண்டு. கிளர-நன்ருகத் தோன்ற) வேறு மரங்கள் இப்போது அருவி மலையின் பாதிக்குக் கீழே வந்து: விட்டது. மேலே சந்தனம், ஈரப் பலா, சுரபுன்னகள் இருக்கின்றன. இங்கே கீழ் மட்டத்தில் வாழை மரங்கள் வளர்ந்திருக்கின்றன. தென்னே மரங்களும் இருக்கின்றன. வாழை மரங்கள் முறிந்து விழுகின்றன. அருவிக்குப் பழைய வேகம் இல்லை. இனிமேல் சிறிது தூரத்தில் கீழே சமகிலம இருக்கிறது. முன்னே வேகமாக இருந்தால் வாழை, மரத்தை அடியோடு பறித்துக் கொண்டல்லவா வரும்? இப் போது அவை ஒடிந்து ஒடிந்து விழுகின்றன. தென்னே