பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"364 திருமுருகாற்றுப்படை விளக்கம் மரங்களில் இளநீர்க் குலைகள் நிறைய இருக்கின்றன. அருவி வீசுகிறதல்ை அந்தக் குலைகள் உதிர்கின்றன. வேகம் மிகுதியாக இருந்தால் தென்னே மரங்களேயே சாய்த்திருக் கும். அங்கே மரங்களில் மிளகு கொடி படர்ந்திருக்கிறது. கொத்துக்கொத்தாகக் காய்த்திருக்கிறது மிளகு. அந்தக் கொத்துக்கள் அருவி தாக்குவதால் கீழே சாய்கின்றன. வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாய (வாழையின் அடிமரம் முறியவும், தென்னே மரத்தின் மேலான இளநீர்க் குலைகள் உதிரவும் தாக்கி, மிளகு கொடியில் காய்க் கொத்துக் கீழே சாயவும். முழுமுதல்-அடிமரம். துமிய-ஓடிய. தாழைதென்ன. கறிக்கொடி-மிளகு கொடி. துணர்-காய்க் கொத்து.) பறவைகள் அடுத்த படி அங்கே உள்ள பறவைகள் அஞ்சுகின்றன. மயில்கள் கூட்டங் கூட்டமாக அங்கே உலவுகின்றன. புள்ளியையுடைய கலாபத்தைப் பெற்ற அவை ஒய்யார மாகத் தோகைகளை விரித்துக் கொண்டு நடன மாதர்போல மெத்தென்று நடக்கின்றன. அருவி கிர்கிர்ரென்று வீசவே அவை அஞ்சி ஒடுகின்றன. காட்டுக் கோழிகள் அங்கே இருக்கின்றன. பெட்டைக் கோழிகள் குஞ்சுகளுடன் உலாவுகின்றன. அவையும் அருவியைக் கண்டு திக்குக்கு ஒன்ருக ஒடுகின்றன. t பொறிப்புற மடங்டை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை இரிய,