பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர் சோலைமலை 365, (பொறிகளையுடைய மேற்புறத்தையும் மெத்தென்ற நடையையும் பெற்ற மயில்கள் பல ஒருங்கே அஞ்சவும், காட்டுக் கோழிகளின் வலிமையை யுடைய பேடைகள் ஓடிப் போகவும். r - பொறி-புள்ளி. மடகடை-மென்மையான நடை. வெரீஇ-அஞ்சி, அஞ்சவென்று கொள்ளவேண்டும்; எச்சத். திரிபு. வயப பெடை-வலிமையையுடைய பெண் பறவை. இரிய-கெட்டு ஒட.) பிற விலங்குகள் பின்னும் அருவி கீழே வருகிறது. இந்தப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளும் கரடிகளும் காட்டு மாடுகளும் இருக். கின்றன. - கரடிகளின் மயிர் பனமரத்தின் சிலாம்புகளைப் போல இருக்கிறது. பனமரத்தின் உள்ளே சோறு போல உள்ள பகுதியில் உள்ள சிலாம்புகள் விறைப்பாக இருக்கும். கரடியின் மயிர் அப்படி இருக்கிறது. அவற்றின் கால்கள் வளைந்தவை. அருவியின் ஓட்டத்திற்குப் பயந்து. காட்டுப் பன்றிகளும் கரடிகளும் ஒடிப் பாறைகள் பிளந்து முழையாக உள்ள இடங்களுக்குள்ளே போய் ஒளிந்து கொள்கின்றன. காட்டுப் பசுக்களில் காளே மாடுகள் இருக். கின்றன. கரிய கொம்பையுடையவை அவை, அவையும். அஞ்சி மகலயே எதிரொலிக்கும்படி முழங்குகின்றன. கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடர் அளச் செறியக் கருங்கோட்டு ஆமா கல்ஏறு சிலப்ப.