பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 t - திருமுருகாற்றுப்படை விளக்கம் வழிபடுவோர் கடைச்சங்க காலம் என்பது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. அந்தக் காலத்தில் முருகனைப் பற்றிய எண்ணங்கள் தமிழ் காட்டில் எவ்வாறு அமைக் திருந்தன என்பதை அறிய இந்த நூல் துணையாக இருக் கிறது. பல வேறு சிலைகளில் உள்ளவர்கள் முருகனை வழி பட்டுப் பயன்பெறும் காட்சிகளைக் காணுகிருேம். சமு. தாயத்தில் இடத்தாலும், கிலேயாலும், தொழிலாலும், பழக்க வழக்கங்களாலும் கீழ் கிலேயில் உள்ளவர்க ளாயினும் மேல் கிலேயில் உள்ளவர்களாயினும் யாவருமே முருகனை வழிபடுகிருர்கள் . அவனை வணங்கி வரம் வேண்டுவதற்கு வரும் கூட்டத் தில் சிவபெருமான் இருக்கிருர், திருமால் இருக்கிருர், இந்திரன் இருக்கிருன். முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவர்களாகிய முப்பத்து மூன்று தேவர்கள், பதினெண் கணங்கள் அவர்களோடு செல்கிருர்கள். கந்தருவர்களும் அவர் மகளிரும் யாழ் வாசித்து அவனைப் பாடுகிருர்கள். யாவரும் பிரமனே விடுதலே, செய்ய வேண்டுமென்று வரம் கேட்பதற்காகத் திருவாவினன்குடிக்கு வருகிருர்களாம். தேவலோகத்து மடங்தையர் தம்முடைய அழகை மிகுவிக்கும் மலர்களைத் தரும் குறிஞ்சிகிலக் கடவுளென்று அவனைப் பாடி ஆடுகிருர்கள். அழகு பொங்கும் அம்மகளிர் அவனேப் பாடுவது மட்டும் அன்று. அழகில்லாத பேய் மகளும் முருகனுடைய வீரத்தைப் பாராட்டிப் பாடுகிருள். இவர்கள் வழிபடுவதைக் கற்பனைக் கண்ணுல் கண்டு மைக்குக் காட்டுகிருர் நக்கீரர். இவ்வுலகில் உள்ளவர்களில் முனியுங்கவர்கள் அவனே வழிபடுகிருர்கள். இடையில் மரவுரியும் தலையில் வெளுத்த