பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 - திருமுருகாற்றுப்படை விளக்கம் மாதரால் வளர்க்கப் பெற்றதும், நான்முகனேச் சிறையிலிட். டதும், கிரவுஞ்சமென்னும் மலேயைப் பிளந்ததும், சூரகன அழித்ததும், தேவயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டதும், வள்ளிகாயகியோடு எழுங் தருளியிருப்பதுமாகிய புராண வரலாறுகளே நக்கீரர் சினேப். பூட்டுகிருர் - முருகுத் திருக்கோலம் முருகன் என்னும் திருநாமத்துக்குரிய பொருளேக் குறிப் பாக ஓரிடத்தில் கூறுகிருர் மணம், தெய்வத் தன்மை யாகிய அருள், இளமை, அழகு என்னும் நான்கும் இணையில்லா வகையில் கிரம்பியவன் முருகன் 'மணங்கமழ் தெய்வத்து இளநலம்' என்பதில் அவற்றைக் குறிப்பிடுகிருர், இந்த முருகுத் திருக் கோலம் பழமையானது. "பண்டைத்தன், மணங்கமழ். தெய்வத் திளகலம்' என்கிருர். அவனுக்கு மிகப் பெரிய விசுவரூபமும் உண்டு. அதைக் கண்டவர் அஞ்சுவர். "அணங்குசால் உயர்கிலே' என்று அதனைச் சுட்டுகிருர், அவ்வளவு பெரிய திருவுருவம் இருப்பினும், பணிபவர்கள் பால் உள்ள பெருங் கருனேயால் அவன் அதை மறைத்துக் கொண்டு அழகனக வருகிருன், அங்க அடையாளங்கள் அவனுக்கு ஆறு முகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் இருக்கின்றன. உலகிலுள்ள இருளை யெல்லாம் போக்கிச் சுடர் விடுகின்றது. ஒரு முகம்; அதற்கு ஏற்ற கைகளில் ஒன்று சூரியனுடைய வெப்பத்தைத் தாங்கிச் செல்லும் முனிவர்களுக்கு அருள்புரிய, மற்ருெரு கை இடை யிலே இருக்கிறது. ஒரு முகம் வணங்கிய அன்பர் களுக்கு வேண்டிய வரங்களேக் கொடுக்கிறது; அதற்காக