பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్లా தொகுப்பு 373. அவன் யானையின் மீது எழுந்தருளியிருக்கும்போது ஒரு கையைத் துடைமேல் வைத்து, மற்ருெரு கையில் அங்கு சத்தைப் பிடித்திருக்கிருன். அந்தணர் செய்யும் வேள்வி களுக்குப் பாதுகாப்பாக கிற்கும் முகமும், அவ்வேள்விகளைக் குலைக்க அசுரர் வந்தால் அவர்களே அழிக்க வேலெடுத்த கையும் கேடயம் கொண்ட கையுமாக அவன் விளங்குகிருன். ஒரு முகம் நுட்பமான கருத்துக்களை விளக்கும்போது ஒரு கை மோன முத்திரையோடு விளங்க, மற்ருெரு கை மார்பிலுள்ள மாலையைப் பற்றியிருக்கிறது. மற்ருெரு முகம் அசுரரை மாய்த்து வென்று களவேள்வி செய்கையில், ஒரு கை மேலே சுழன்று ஆவன செய்யும்படி ஏவ, மற்ருெரு கை மணியை ஒலிக்கிறது. வள்ளி நாச்சியாரோடு இன்பம் கொள்ளும் ஒரு முகத்துக்கு ஏற்ப மழை வளம் சுரக்கச் செய்யும் ஒரு கையும், தேவலோக மடங்தையருக்கு மண மாலே வழங்கும் ஒரு கையும் விளக்குகிள் றன. இப்படி ஆறுமுக காதணுகப் பன்னிருகைப் பரமனக அவன் தோற்றம் அளிக்கிருன். . - அவனுடைய திருவடி அடைவாரைத் தாங்குகிறது. அவனுடைய இடையில் சிவந்த ஆடை ஒளிர்கிறது. அவன் மார்பில் கடம்பு மாலை இலங்குகிறது; முத்தமாலே அசை கிறது. அவனுடைய காதுகளில் குழையும், தலையில் மணிமுடியும் சுடர்கின்றன. அவன் காந்தளங் கண்ணியை முடிமேல் அணிந்திருக்கிருன். அவனுடைய திருமேனி சிவப்பு நிறமுடையது; கதிரவனைப் போன்ற ஒளி வீசுவது. உறையும் இடங்கள் இத்தகைய திருக்கோலத்தையுடைய முருகன் திருச் கோயில்கள் உள்ள ஆறு படைவீடுகளில் எழுந்தருளி