பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 திருமுருகாற்றுப்படை விளக்கம் யிருக்கிருன். கோயில் இல்லாத ஆற்றிலும், குளத்திலும், மன்றத்திலும், பொதியிலிலும், சதுக்கத்திலும், சந்தியிலும் இருக்கிருன். அவன் இல்லாத இடம் இல்லை. எங்கே அன்பர்கள் உணர்வு பெற்று கின்று வாழ்த்திப் போற்று கிருர்களோ, அங்கே அவள் எழுந்தருளி உடனே கருணை: பாலிப்பான்; வேறு யாராலும் வழங்க முடியாத முத்தியின் பத்தை வழங்குவான். இவ்வாறு முருகனுடைய அருளேக் கூறும் இந்த நூல். அந்தக் காலத்து மக்கள் இயல்பையும், இயற்கை வளத்தையும் கவிச்சுவை பொங்கப் புலப்படுத்துகிறது. இந்த அரிய நூலேப் பாராயணம் செய்யும் பழக்கம் கெடுகாட்களாக இந்த காட்டில் இருந்து வருகிறது. ' நக்கீரர் தாம்உரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாள்தோறும் சாற்றினல்’’ என்று வரும் பாட்டு காள்தோறும் பாராயணம் பண்ணும் ம்ரபையும் அதன் பயனையும் தெரிவிக்கிறது. இது சங்க நூற் சோலேயின் முன்னே முதலில் திகழும் கற்பக மரமாகவும், பன்னிரண்டு திருமுறைகளின் இடையே திகழும் சோதி மரமாகவும் விளங்குகிறது. காலத்தை எதிரீட்டு கின்று பொலியும் திருமுரு, காற்றுப்படை எல்லாருக்குமே முருகன் திருவருகிளப், பெறுவதற்குத் துணே செய்யும் வழிகாட்டி.