பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பிறந்த கதை 25 பரிசை அளிக்கலாமே என்று எண்ணினன். உடனே ஆயிரம் பொன்னே எடுத்து ஒரு கிழியில் கட்டித் தமிழ்ச் சங்க மண்டபத்தின் முன்னுல் ஒரு கோலே கட்டு அதில் அதைத் தொங்கவிட்டான். "என்னுடைய கருத்துக்கு இசைக்த பாட்டை யார் பாடுகிருரோ அவர் இந்தக் கிழியைப் பெறுவார்' என்று சொல்லி அந்தச் செய்தியை முரசு அறைவித்தான். இந்தச் செய்தி எங்கும் பரந்தது. மதுரையிலுள்ள திருக்கோயிலில் சுந்தரேசப் பெரு அமானுக்கு வழிவழி அடிமை செய்து பூசை இயற்றி வந்த ஆதி சைவகிைய தருமி என்பான் பிரம்மசாரி. அவனுக்கு ஆண்டவனிடத்தில் மிகவும் முறுகிய பக்தி இருந்தது. தனக்கு மணமாகவேண்டு மென்ற ஆர்வம் அவனுக்கு உண்டாயிற்று. அதற்குக் காரணம் தான் சுகம் அடைய வேண்டுமென்பது அன்று. தொடர்ந்து பரம்பரை பரம் பரையாக, தகப்பனுக்குப் பின் மகளுக, இறைவனுடைய திருத்தொண்டைச் செய்துவரும் குலம் அது தருமி என்னும் அர்த ஆதி சைவன் வரையில் இறைவனுடைய திருத் தொண்டு முட்டின்றி கடந்து வந்தது. இனி அவனும் மணம் செய்துகொண்டு மகனைப் பெற்ருல்தான் இந்தத் திருத்தொண்டுப் பரம்பரை வளர்ந்து வரும். அப்படியின்றி அவன் மணம் செய்து கொள்ளாமல் இருப்பானல்ை அந்தப் பரம்பரை அற்றுவிடும். "உனக்குத் திருத்தொண்டு செய் கின்ற இந்தக் குலம் அருமல் தொடரவெண்டுமே; அதற் காகவே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்" என்று இறைவனிடம் முறையிட்டுக் கொண்டான் தருமி. அந்தக் காலத்தில் ஆதி சைவர்களுக்குத் திருமணம் ஆகவேண்டு மால்ை பெண்களுக்கு பிரம்பப் பணம் கொடுக்க வேண்டும். பணத்தை ஈட்டும் வழி அறியாத தருமி இறைவன்