பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 377 இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் கல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறு இல் கொற்றத்து 60 எய்யா நல் இசைச் செவ்வேற் சோய் - சேவடி படரும் செம்மல் உள்ளமொடு கலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவு நயந்தன. ஆயின், பலவுடன் கன்னர் நெஞ்சத்து இன்கசை வாய்ப்ப 65 இன்னே பெறுதிநீ முன்னிய வினையே; செருப்புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி வரிப்புனே பங்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில் திருவிற் றிருந்த தீதுதிர் நியமத்து 70 மாடமலி மறுகிற் கூடற் குடவயின் - இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனேமலர் 75 அஞ்சிறை வண்டின் அளிக்கணம் ஒலிக்கும் .குன்றுஅமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று. 2. திருச்சீரலைவாய் வைந்துதி பொருத வடு ஆழ் வரிதுதல் வாடா மாலே ஓடையொடு துயல்வரப் - படுமணி இரட்டும் மருங்கிற் கடுநடைக் 80 கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு ஐவேறு உருவிற் செய் வினே முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி - மின் உறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப 85.