பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 - திருமுருகாற்றுப்படை விளக்கம். ககைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலம்குழை சேண் விளங்கு இயற்கை வாள்மதி கவை.இ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள்கிற முகனே: 903, மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம்கொடுத் தன்றே; ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ 95, அந்தணர் வேள்விஒர்க் கும்மே; ஒருமுகம் எஞ்சிய பொருளே ஏமுற காடித் திங்கள் போலத் திசைவிளக்கும்மே; ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே; ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு கை அமர்ந் தன்றே; ஆங்கம் மூவிரு முகனும் முறைகவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு 105. வண்புகழ் விறைந்து வசிந்துவாங்கு கிமிர்தோள்: விண்செலல் மரபின் ஐயர் க்கு ஏந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; நலம்பெறுகலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது - - ஒருகை; அங்குசம் கடாவ ஒருகை, இருகை 110, ஐயிரு வட்டமொடு எஃகுவலக் கிரிப்ப, ஒருகை மார்பொடு விளங்க, ஒருகை தாரொடு பொலிய, ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒருகை பாடின் படுமணி இரட்ட, ஒருகை 115, ல்ேகிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை