பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 4. திருவேரகம் இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமை கல்லியாண்டு ஆறினில் கழிப்பிய அறன்கவில் கொள்கை மூனறுவகைக் குறித்த முத்திச் செல்வத்து இருபிறப்பாளர் பொழுதுஅறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண் ஞாண். புலராக் காமுகம் புலர உடீஇ உச்சிக் கூட்பிய கையினர், தற்புகழ்ந்து ஆறுஎழுத்து அடுக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கின் நவிலப் பாடி, விரைஉறு நறுமலர் எந்திப் பெரிதுவந்து ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று. 5. குன்றுதோருடல் பைங்கொடி கறைக்காய் இடைஇடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரை இக் குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன், நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் இடு.அமை விளந்த தேக்கள் தேறல் . குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர, விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு குறுங்கால் குண்டுசுன பூத்த வண்டுபடு கண்ணி \ இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லே இலேயுடை ,றும்பூச் செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை 38 i. 180° 185, 190 195. 200."