பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.26 திருமுகாற்றுப்பட்ை விளக்கம் திருவருளே மாத்திரம் ஈட்டிக் கொண்டு வந்தான். ஆகை. யால், "எம்பெருமானே! திருமணத்திற்குரிய பொருள் என்னிடம் இல்லையே' என்று விண்ணப்பித்துக்கொண்டு: வந்தான். இறைவன் அவனுக்குத் திருமணம் செய்து வைப்ப தற்குத் தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் போலும்! பாண்டியன் தன் கருத்தை வைத்து நுட்பமான முறையில் பாடல் பாடுகிறவர்களுக்கு ஆயிரம் பொன் வழங்குவதாக முரசு அறைந்தவுடன், சிவபெருமான் ஒரு காரியம் செய்தான். ஒரு பாடலே எழுதி அதனைத் தருமி யிடம் கொடுத்து, "இதைக் கொண்டு போய்ப் பாண்டி யனுக்குக் காட்டினல் அவன் ஆயிரம் பொன் தருவான். அதனைப் பெற்று நீ திருமணம் செய்து கொள்வாயாக' என்று திருவாய் மலர்ந்தருளினன். "கொங்குதேர் வாழ்க்கை" என்று தொடங்கும் அந்தப் பாட்டு, ஒரு தலைவன் தன் தலைவியினுடைய அழகைப் பாராட்டிக் குறிப்பாக அவள் கூந்தலுக்குள்ள இயற்கை மணத்தைச் சொல்வதாக அமைந்தது. அந்தப் பாட்டைத் தருமி பெற்றுக்கொண்டு நேரே பாண்டியனிடம் சென்ருன், பாண்டியன் அந்தப் பாடலைப் பார்த்தான். பல காலமாகத் தன்னுடைய கருத்து, கவிதை உருவில் வரவில்லையே என்ற எக்கமும், சங்கத்தில் இருந்த புலவர்கள் யாரும் தன்னு: டைய கருத்தைத் தெரிந்துகொள்ள வில்லையே என்ற வருத் தமும் பெற்றிருந்த பாண்டியன் அந்தப் பாட்டுத் தன் கருத்தை மிக கன்ருகச் சொல்வதை உணர்ந்தவுடன். அவனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லேயே இல்லை. வேறு சமயமாக இருந்தால் ஆளே அனுப்பித் தருமியை அழைத்துக்கொண்டு சென்று அந்தக் கிழியை எடுத்துக்