பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் பயன் --- எந்தக் கடவுளுடைய துதியாக இருந்தாலும் அதற்கு ஒரு பயனைச் சொல்வது மரபு. வடமொழியில் அதைப் பலசுருதி என்று சொல்வார்கள். தமிழில் சில துதி நூல் களுக்குப் பயன் கூறப்பட்டிருக்கும். திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகங்களில் ஒவ்வொன் றுக்கும் பயன் உண்டு. பதிகத்தின் இறுதிப்பாட்டாகிய இருக்கடைக்காப்பில், இதனே ஒதுவார் இன்ன பயனைப் பெறுவார் என்று சம்பந்தப் பெருமானே பாடி யுள்ளார். 'அருநெறியமறை வல்ல முனியகன் பொய்கை யலர்மேய - பெருநெறியபிர மாபுர மேவிய பெம்மா னிவன்றன்னே ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம் பந்த னுரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே' - என்பதுபோல வரும் திருக்கடைக்காப்புப் பாசுரங்களைப் பார்த்தால் இது விளங்கும். எல்லா நூல்களிலும் பயன் கூறும் பாடல்கள் இல்லாவிட்டாலும் சிலவற்றில் இருக் கின்றன. - நூல்களைப் பாராயணம் செய்யும் அன்டர்கள் இறுதி யில் பயனச் சொல்வது ஒரு பழக்கம். திருமுருகாற்றுப் படை இந்த காட்டில் பல காலமாகப் பாராயண நூலாக