பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 திருமுருகாற்றுப்படை விளக்கம் நயனெடும் எடுத்து வினைகள் தீர்த் தருளும் நன்சுனே காட்டிநீ ராட்டி அயிலுடை நம்மைக் கிழவனென் றனையென் ருலயத் தடைந்தனன் காண.” "இனிதொர்கவி குன்றமெறிந் தாயெ னப்பின் என்றும் இளே யாய்அழகி யாய்என் னுங்கால் மனமகிழ்ந்தி தியார்பகர்வார் அவர்க்கு வேண்டும் வரங்கொடுப்போம் மதுரையிற்போ கென்னப் போந்து கனமலிசங்கத்துரைப்பத் கேட்டி யாரும் களிகூர்ந்தார் தமிழ்முருகன் அருளை வாழ்த்திப் பனுவல் திரு முருகாற்றுப் படையென் ருேங்கிற் றென நயந்து’’ இவ்வாறு பழைய திருவிளேயாடற் புராணம் திருமுரு காற்றுப்படை தோன்றிய வரலாற்றை வேறுபடக் கூறும். "பழமுதிர் சோலே மகூகிழவோனே" என்று திருமுரு காற்றுப்படை முடிகிறது. அங்குள்ள கிழவோனே என்னும் சொல்லே எண்ணியே இந்த வரலாறு எழுந்திருக்க வேண்டும். இடையிலும். "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்று ஒரடி வருகிறது. . கிழவன் என்ற சொல்லுக்கு முதியவன் என்ற பொருள் பழங்காலத்தில் இல்லே. அது பிற்காலத்தில் தோன்றியது. தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் அச்சொல் உரிமையுடையவன் என்ற பொருளில்தான் வருகிறது. கிழமை-உரிமை, கட்பு. காதலுடைய கணவனைக் கிழவன் என்று கூறுவர். இதை முன்பும் பார்த்தோம். பிற்காலத்தில் கிழவன். கிழவி என்னும் சொற்கள் முதுமையையுடையவர்களேக் குறிக்கும் சொற்களாகவும்