பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 389. வழங்கத் தொடங்கின. பழைய திருவிளையாடலைப் பாடியவர் காலத்தில் அந்தப் பொருள் வந்துவிட்டது. அதல்ை இந்த வரலாற்றை அமைத்தார். சில திருவிகள :யாடற் புராணப் பிரதிகளில் இந்தப் பாடல்கள் இல்லை என்று அதனைப் பதிப்பித்த டாக்டர் ஐயரவர்கள் எழுதி யிருக்கிருர் கள். அருணகிரிநாதர் காலத்துக்கு முன்பே கிழவன் என்ப தற்கு முதியவன் என்ற பொருள் வந்துவிட்டது. ஆதலின் "இளங் குழந்தையாகிய முருகனேக் கிழவனென்று கூறு கிறதே உலகம்' என்று நயமாக ஒரு பாடலைக் கந்தர் அலங் காரத்தில் அவர் பாடியிருக்கிருர். அதை முன்பு பார்த்தோம். "குன்றம் எறிந்தாய்' என்று தொடங்கும் வெண்பா முதலாகப் பத்து வெண்பாக்கள் திருமுருகாற்றுப்படைக்குப் பின்னே காணப்படுகின்றன. பத்துப் பாட்டைப் பதிப்பித்த ஐயரவர்கள் இந்த வெண்பாக்களையும் பதிப்பித்துள்ளார்கள் அங்கே அவர்கள் எழுதியுள்ள குறிப்பு ஒன்று உண்டு. "அடியில் உள்ள பாடல்கள், பத்துப் பாட்டும் சேர்ந்துள்ள பழைய ஏட்டுப் பிரதிகளில் இல்லாமல் திருமுருகாற்றுப் படை மட்டும் உள்ள புதிய ஏட்டுப் பிரதிகளிலும் அச்சுப் பிரதிகளிலும் இருந்தமையால் தனியே பதிப்பிக்கப்பெற்றன’ என்பது அது. ஆகவே, இந்தப் பாடல்கள் பழைய பிரதிகளில் இல்லையென்று தெரிய வருகிறது. அதலுைம் இவற்றின் கடை, உள்ளுறை ஆகியவற்ருலும் இவை பிற்காலத்தில் எழுந்தவை என்பது தெளிவாகும்.