பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 393 அன்பர், மேலே முருகன் திருக்கையில் உள்ள வேலாயுதத்தைப் பற்றிச் சொல்ல வருகிருர், மூன்று வெண்பாக்களில் வேலைப்பற்றியே கூறுகிருர். முருகன் வேற்படையை எறிந்தே தான் ஆற்றிய விரச் செயல்களில் பெரும்பாலனவற்றைப் புரிந்தான். அவன் கிரவுஞ்ச மலையைப் பொடிப்பொடி யாக்கினன். அவனுடைய திருக்கை வேலே அந்தக் காரியத்தைச் செய்தது. மாயையின் மகனுகிய குரனேயும் அவனுடன் சேர்ந்திருந்த அசுரர்களே பும் வலி குன்றும்படி போரிட்ட தும் அந்தத் திருக்கை வேல்தான். அறியாமை அல்லது அஞ்ஞான மயமாக கின்றவர்கள் அசுரர்கள். வேலோ ஞான சக்தி அஞ்ஞான சக்தியை அழிப்பதற்கு ஞான சக்திக்குத்தான் வலிமை இருக்கிறது. ஆதலின் அஞ் -ஞானப் பரபபாகிய அசுரர்களோடு செய்த போரில் வேல் அவர்களே அடியோடு அழித்து வெற்றியுடன் விளங்கியது. சூர சங்காரம் கடந்தது மிகப் பழைய காலம். அந்தப் பண்டைக் காலத்தில் வீரச் செயல்களே ஆற்றிய வேல், தன்னுடைய ஆற்றலால் அமரர்களுக்கு வந்த இடர்களே யெல்லாம் களைந்தது. தங்கள் காட்டை -யும் வீட்டையும் பதவியையும் இழந்து, அசுரேந்திரளுகிய குரனுக்கும் அவனுடைய ஏவலர்களுக்கும் அஞ்சி கடுங் கினர்கள் தேவர்கள். அசுரர்களால் அவர்கள் பட்ட இன்னல் கொஞ்ச கஞ்சம் அல்ல. முருகனுடைய வேல் அசுரர்களைக் கட்டழித்ததனால் அமரர்களின் இடர்கள் திர்ந்தன. குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங்கு அமரர்இடர் தீர்த்ததுவும்.வேல்.