பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 திருமுருகாற்றுப்படை விளக்கம் இது பழைய கதை. ஆனல் அந்த வேல் இன்றும் தொழிற்படுகிறது; பக்தர்களுக்குப் பாதுகாப்பாக கின்று. உதவுகிறது. - " துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கின் அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்கொர்துணே யாகும்' என்று அருணகிரியார் வேலைப் பாராட்டுவார், அடியார் களுக்கு வேல் துணையாக விளங்குவது. தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகல்துணைய தாகும்’ என்பதும் அருணகிரியார் வாக்கு. அன்பர்களே விட்டு: நீங்காமல் உடனிருந்து துனே செய்வது வேல், நக்கீரர் முதலிய ஆயிரம் பேரைக் குகையில் அடைத்து: வைத்தது கற்கிமுகி என்ற பூதம். நக்கீரர் திருமுருகாற்றப் படை பாடியவுடன் முருகன் வேலாயுதத்தை ஏவின்ை. அது பூதத்தைக் சொன்று குகையை இடித்து அதில் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை வழங்கிக் காப்பாற்றியது. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்துவழி காணும்' என்பது வேல், வகுப்பு. -இன்றுஎன்ளைக் கைவிடா கின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் - .....வேல். முருகன் பெருவீரன். அவன் கையில் இருப்பதனல் தான் வேலுக்கு இத்தனை பெருமை உண்டாயிற்று. படைக்கலம் சிறந்ததாக இருந்தால் போதாது. அதை எந்துகிறவர்கள் விறலுடையவர்களாக இருக்க வேண்டும். t,