பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பிறந்த கவிதை 27° கொள்ளச் சொல்லியிருப்பான். இப்பொழுதோ அந்தப் பாட்டினல் உண்டான பேருணர்ச்சி இன்ன முறையில் செய்ய வேண்டும் என்பதை மறக்கச் செய்தது. சட்டென்று. "நீ போய்ப் பொற்கிழியை எடுத்துக் கொள்" என்று வேக மாகச் சொன்னன். அதற்காகவே காத்திருந்த தருமியும் மிக்க விரைவில் சென்று சங்க மண்டபத்தின்முன் தொங்க. விட்டிருந்த பொற்கிழியை அவிழ்க்கத் தொடங்கின்ை. மண்டபத்தில் அமர்ந்திருந்த புலவர்கள் இதைப் பார்த் தார்கள். அவர்களுக்குத் தலைவராக வீற்றிருந்த நக்கீரர் தருமியிடத்தில், நீ யார்? என்ன செய்கிருய்?' என்று கேட்டார். பாண்டியன் என்னை இந்தப் பொற்கிழியை அறுத்துக்கொள்ளச் சொன்னன்' என்று பதில் அளித்தான் தருமி. 'நீ என்ன செய்தாய்?" என்று புலவர் கேட்க, "கான் கொண்டு வந்து காட்டிய பாட்டைப் பாண்டியன் கண்டு இதனை எடுத்துக் கொள்ளச் சொன்னன்' என்று சொன்னன். "எங்கே, அந்தப்பாட்டை இங்கே கொடு' என்று ாக்கீரர் சொல்லவே தருமி அந்தப் பாட்டைக் கொடுத்தான். நக்கீரர் தருமியை மேலும் கீழும் விழித்துப் பார்த்தார். அந்தப் பாடலே இயற்றும் ஆற்றல் அவனுக்கு இல்லே யென்பதை அவனுடைய முகக்குறிப்பினல் தெரிந்து கொண்டார், முன்பே பொருமைக்கு ஆளாகிய நக்கீரருக்கு இப்பொழுது கோபமும் உண்டாயிற்று. உடனே, "இந்தப் பாட்டுப் பிழையானது' என்று சொன்னர். "என்ன பிழை' என்று தருமி கேட்டான். "பிழையைத் தெரிந்து கொள்வதற்கும் அறிவு வேண்டும். உன் முகத்தைப் பார்த். தால் இந்தப் பாட்டைப் பாடியவன் நீ என்று தோன்ற: வில்லை. உனக்கு யாரோ ஒரு புலவன் பாடிக்கொடுத்திருக்