பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் 4. இடும்பைக் குன்று : மனிதனுக்கு ஓயாத கவலே. ஒழியாத துன்பம், அவனுடைய துன்பத்துக்கு ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்பதென்பது இயலாத காரியம். ஆற்று மணலை எண்ணிலுைம் எண்ணலாம்; அவனுடைய துன்பத்தை எண்ண முடியாது. அது குவியல் குவியலாக அடர்ந்து நிற்கிறது. நாளாக ஆகத் துன்பம் கரைந்து போகும் என்ற எண்ணத்துக்கும் இடம் இல்லே தீர்க்காத கடன் வட்டியும் முதலுமாக ஏறிக்கொண்டு போகிறது போலத் துன்பம் மலேயாக உயர்ந்து அழுத்துகிறது. r மனிதன் பிறந்து குழந்தையாக விளையாடும்போது துன்பம் அதிகம் இருப்பதில்லே அவனுக்கு வேண்டியவற்றை அவன் தாய் தந்தையர் அளித்து வளர்க்கிருர்கள். அவனே குருவி போல அடுத்த வேளைக்கு இது வேண்டுமே என்ற கவலேயே இல்லாமல் விளையாடித் திரிகிருன், குழங்தை களுக்குப் பொறுப்பு இல்லை; கவலே இல்லை; குறை இல்லை; வஞ்சகம் இல்லை; ஆகவே துன்பம் குறைவு. மனிதனுக்கு வயசு ஆக ஆக அவனைத் துன்பங்கள் சூழ்ந்து கொள் கின்றன. வரவர அவனுக்குப் பல உறவினர்களும் நண்பர் களும் உண்டாகி விடுகிருர்கள். அதனல் தனக்காக அவன் படும் துன்பங்களோடு அவர்களுக்காக வேறு துன்பங் களே அடையவேண்டி நேர்கிறது. உடைமைகளைச் சேர்த்துக் கொள்கிருன். அவற்ருலும் துன்பம் மண்டு கிறது. எத்தனைக்கு எத்தனை பிறரோடும் பிற பொருளோடும் தொடர்பு வைத்துக் கொள்கிருனே, அத் தனக்கு அத்தனை அவனுக்குத் துன்பங்களே வந்து குழ்கின்றன. இருக்கும் பொருள்களைக் காப்பாற்ற வேண் .டுமே என்ற துன்பம்; அவை பழுதுபட்டால் செப்பம் செய்ய