பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் - 399 வேண்டுமே என்ற கவலை. இல்லாத பொருள்களுக்காக ஏங்கி விற்பது ஒரு துன்பம். - யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் - அதனின் அதனின் இலன்' என்பார் திருவள்ளுவர். தொடர்பு அற அறத் துன்பமும் அறும். தொடர்புமிகுதி ஆக ஆகத் துன்பமும் மிகுதியாகும். ஆகவே ஒவ்வொரு நாளும் மனிதனே அழுத்துவதற்குத் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை நீக்க வழி என்ன? மலேபோலத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு திணறும் அவல கிலேயை ம்ாற்ற உபாயம் இல்லையா? துன்பம் என்பது மனத்தில் உண்டாகும் உணர்வு, இன்பமும் அத்தகையதே. பல பற்றுக்களே உடைய மனம் கவலைக்கு ஆளாவது இயல்பு. அறியாமையில்ை இந்தப் பற்று உண்டாகிறது. அறியாமை அல்லது அஞ்ஞானம் ஒழிந்தால் மனத்திலே கவலே வில்லாது. - 'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’ என்ற நிலை உண்டாகும். அஞ்ஞானத்தைப் போக்கி விட்டால் கவலை ஒழியும், துன்பம் நீங்குமென்ருல் அதைப் போக்கும் வழி யாது என்று ஆராய வேண்டும். அஞ்ஞானம் அறியாமை, அதற்கு மாற்று ஞானம் அல்லது அறிவு. மெய்யறிவு தலைப்பட்டால் மனம் தெளிவு பெறும் பற்றற்று நிற்கும்; கவலை ஒயும் இன்பம் பாயும். இறைவன் திருவருளால் அந்த ஞானம் வர வேண்டும். அது அஞ்ஞானக் குவியலேப் போக்கி விடும்; இடும்பை மலையை எரித்து விடும். -- முருகப் பெருமானுடைய திருக்கையில் இருப்பது வேற்படை. அது ஞானத்தின் திருவுருவம்: ஞானசக்தி;