பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 திருமுருகாற்றுப்படை விளக்கம் நீண்டு அகன்று கூர்மையாக உள்ள அறிவின் அடையாளம். அசுரர்கள் அவிச்சை அல்லது அறியாமையின் உருவம், அறியாமையை இருள் என்றும் கூறுவர். இருளில் பொருள்களின் வடிவமும் வண்ணமும் தெரியாமல் இருப்பது. போல, அறியாமை காரணமாக உண்மை புலணுகாமல் இருக்கும். இருளிலே செயல் புரிபவர் அசுரர்கள் ; கிசா சரர்கள் என்பது அவர்களுக்குப் பெயர். அவர் உடல் கறுப்பு; உள்ளம் கறுப்பு: செய்கை கறுப்பு. அவர்களுக் குரிய காலம் ஒளியில்லா இரவு முருகனுடைய வேல் அசுரர்களே மாய்த்தது; இது புறத்தே அமைந்த வீரச் செயல். அறியாமையை அழித்துத் தூய இன்பத்தை நிலை நாட்டும் ஞானமாதலின் ஒளியுடைய வேலாக கிற்கிறது. அதைத் தியானித்தால் நெஞ்சில் இருள் போகும்; கவலை. நீங்கும்; துன்பம் ஒழியும். இதைப் புலவர் சொல்ல வருகிருர். 'முருகா, நீ அறியாமையே வடிவான அசுரர்களை ஞான சக்தியாகிய வேலாலே பொடிபடுத்தினுய். கொலையேயன்றி வேறு செய் கறியாத ஆயுதத்தைச் சூரன் கையில் வைத்திருந்: தான். அவன் படை ஒளியற்றது. அவனே நீ தடிந்தாய். அவன் அகங்கார வடிவாக கின்றவன். அவனுக்குத் துணை யாக மமகார வடிவமாக கின்றவன் மலேயுருவம் கொண்ட கிரவுஞ்சாசுரன். கிரவுஞ்ச மலையை நீ வேல் கொண்டு: பிளந்தாய், அது மாயமான மலை; பெரிய மலே; வன்மை யான மலே. அதைப் பொடிபடுத்திய வேல் இப்போது உன் கையில் ஒரு வேலையும் இல்லாமல் இருக்கிறதேr அதற்கு ஒரு சிறு வேலே தருகிறேன். அதை நீ ஏவியருள வேண்டும். தேவர்கள் அஞ்சிய பெரிய மலையைப் பொடி. படுத்திய அதற்கு நான் சொல்லும் குன்றை அழித்தல் மிகவும் எளிய செயல். நீ உன் கை வேலை ஏவி இந்தக்