பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 401 குன்றையும் அழிப்பது உன் கருணைக்கு ஏற்ற செயல்: எளிய செயல். எனக்கோ இதல்ை பெரிய கன்மை உண் டாகும். அது என்ன குன்று என்ரு கேட்கிருய்? என்னு டைய துன்பமென்னும் குன்றைத்தான் சொல்கிறேன். இதைப் போக்க என்னல் முடியவில்லை. வேறு யாராலும் இதை அழிக்க முடியாது. மலேயைப் பொடியாக்கிய உன் கை வேலுக்கே இது தக்க செயல். ஆகவே சூர்சடிக்க கொற்றவனே! கிரவுஞ்ச மலே உருவும்படி : விட்ட வேலே , என் இடுப்பைக் குன்றின் மேல் ஏவுவது மிகவும் பொருத்த மான காரியம். இதைச் செய்தருளி என்னத் துன்பத்தி னின்றும் விடுவித்துப் ப்ாதுகாக்க வேண்டும்.' இப்படி வேண்டிக் கொள்கிருர், - இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக் கொன்னவில்வேல் சூர்தடிந்த கொற்றவா! --முன்னம் பணிவேய் நெடுங்குன்றம்பட்டுருவத் தொட்ட தனிவேல வாங்கத் தகும். . (கொலேயே பயின்ற ஆயுதத்தை உடைய சூரபன் மனச் சங்காரம் செய்த பெருமானே! முன்பு பனியாலே மூடப்பெற்ற உயர்ந்த கிரவுஞ்ச மலயில் புகுந்து உருவும் படி ஏவிய ஒப்பற்ற வேலை, இன்னும் ஒருமுறை என்னு டைய துன்பமாகிய குன்றை ஒழிப்பதற்கும் விடுவது தக்க செயலாகும். . . - இடும்பை-துன்பம். தொல் நவில் வேல்-கொலேயே பiன்ற வேல். வேல் என்பது இங்கே ஆபுசத்தைக் குறித் தது; வேற்படை என்றும் சொல்லலாம். சூர்-சூரபன்மன், கடிந்த-அழித்த, நெடுங் குன்றம்-உயர்ந்த மலையாகிய கிரவுஞ்சம், தொட்ட-வீசிய, தனி-ஒப்பற்ற வாங்கத் தகும்-வாங்கினல் அச்செயல் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அந்த ம அலயைய் பிளந்த வேலுக்கு இத்தக் குன்றைப் பிளப்பது எற்புடையது என்றபடி.1 . . திரு-26 -