பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 திருமுருகாற்றுப்படை விளக்கம் முருகனுடைய திருவருளால் அறிவு பெற்றுத் தெளிவு உண்டானல் கவலேயும் தன்பமும் நீங்கும். இருள் நிறைந்த மனத்திலே கப்பிக் கொண்ட துன்பங்களைப் போக்க நம் உள்ளத்தில் அவன் திருக்கை வேலே அவனருளால் தியானம் செய்ய வேண்டும் என்பது கருத்து. 5 பன்னிருகைப் பெருமாள் மனிதன் தன்னுடைய மனக்கவலையைப் போக்கிக் கொள்வதற்கு யார் யாரையோ பின்பற்றி ஏமாந்து போகிருன். தன்னே விடப் பணக்காரர்களால் தன்னுடைய வறுமை போகும் என்று நம்பி அவர்கள்ே அணுகுகிருன். ஆனல் அவனுடைய எண்ணம் நிறைவேறுவதில்லை. தன்னை விடப் பலம் உடையவர்களால் தன்னுடைய பகையச்சம் தீருமென்று அவர்களே அணுகுகிருன். அவர்களும் அவனு டைய அச்சம் முழுவதையும் போக்கும் வலிமை உடையவர் களாக இருப்பதில்லை. கல்வி நிறைந்தவர்களால் தன்னுடைய அறியாமையைப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி முயற்சி செய்கிருன். அந்த முயற்சியிலும் முழு வெற்றியை அவன் அடைகிறதில்லை. இது மட்டும் அன்று. எதேனும் ஒரு பொருளால் தனக்குக் குறைவு இருப்பதை எண்ணி அதை நிறைவு செய்வதற்குத் தன்னே விட அப்பொருளே மிகுதியாக உடையவனே நாடினல், அவனும் ஒருவகைக் குறைபாடு உடைய வகைவே இருக்கிருன். குறைவில்லாத நிறைவுடை யோகை யாரையும் காணமுடியவில்லை. ஒவ்வொருவனும் தன்னுடைய குறையை விரப்பிக் கொள்வதற்குத்