பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் - 403 தன்னினும் சிறந்த ஒருவனே நாடிக் கொண்டே இருக்கிருன். - குறைவே இல்லாமல் முழு நிறைவுடன் யாரேனும் இருந்தால் அவளுல் நமக்கு வேண்டிய எல்லாவற்றை :யும் கிரப்பிக் கொள்ளலாம். அறிவு, ஆற்றல், செல்வம் என்னும் மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத சக்தி களாகும். இங்க மூன்றில்ை தனி மனிதனும் சமுதாயமும் வளம் பெற்று வாழலாம். இவற்றை நிறைவாகப் பெற வேண்டுமானல் குறைவிலா கிறைவையுடைய ஒருவனே அணுக வேண்டும். அப்படி யாராவது இருக்கிருர்களா? ஆம், இருக்கிருன்; ஒரே ஒருவன்தான் இருக்கிருன். அவன் தான் இறைவன். "குறைவிலா கிறைவே' என்று மாணிக்கவாசகர் இறைவனைக் கூறுகிருர். அவனுடைய திருவருள் இருந் தால் நம்முடைய மனம் கிறைவு பெறும், மனம் நிறைவு பெறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அதிக ஆசைப்படாமல் இருப்பது. மற்ருென்று இறைவன் திருவருளேப் பெறுதல், ம ணி த ன் தன்னுடைய உள்ளத்தில் ஆசையை வளர்த்துக்கொண்டே வர்தால் அதனை அடக்குவது எளிதன்று. ஆசை என்பது பெரிய தி. அதற்கு இரை போடப் போட அது மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டேயிருக்கும். ஆதலால் அதைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும். நமக்கு எது இன்றியமையாததோ அதைப் பெறுவதற்கு விரும்புவது தவறு அன்று. அளவுக்கு மிஞ்சிப் பொருளே அவாவில்ை அது நிறைவேருது. இறைவனுடைய திருவருளில் கம்பிக்கை உள்ளவன் தனக்கு வேண்டியதை அள வோடே பெற விரும்புவான். இறைவன் அவனுடைய கியாயமான விருப்பத்தை அறிந்து நிறைவேற்ற முன் வருவான். r.