பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 திருமுருகாற்றுப்படை விளக்கம் ஆசையை அடக்குதலும் இறைவனிடம் நம்பிக்கை வைத்துப் பக்தி பண்ணுதலும் குறைவிலா நிறைவு அடைவதற்கும் மனக்கவலே போக்குவதற்கும் உரிய வழிகளாகும். தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’’ என்பது திருக்குறள், கானல் நீரை நம்புவதுபோலக் குறைவுடைய மனிதர்களே நம்பி வாழ்கிறவர்களுக்கு ரிச்சயமாக ஏதேனும் ஒரு சமயத்தில் அவர்களுடைய பலவீனம் புலகுைம். ஆகையால் இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு முயல வேண்டும். இறைவனே கேரே வந்து நமக்கு உதவி புரிய மாட்டான். அவனுடைய திருவருளால் அவ்வப்போது தக்கவர் களுடைய துணை கிடைக்கும் வீட்டில் உள்ள மின்சார மூலப் பொத்தானை அமுக்கினல் விளக்குகளும் மற்றவை. களும் இயங்கத் தொடங்கும். அது அதற்கு ஏற்ற பொத்தானேயும் அமுக்க வேண்டும். மூலக் கருவியை இயக்க மறந்துவிட்டால் உள்ளே உள்ள எதனையும் பயன்படுத்திக்கொள்ள முடியாது, இறைவனுடைய திருவருள் மூலக்கருவியைப் போன்றது. மற்ற முயற்சி கள் அங்கங்கே உள்ள பொத்தானை அமிழ்த்துவது போன்றது. இந்த இரண்டுமே மனிதனுடைய முயற்சியைப் பயனுறச் செய்கின்றன. இறைவனுடைய திருவருளில் கம்பிக்கை இல்லாவிட்டால் அவனிடம் மனமாரப் பக்தி: செய்யமுடியாது. அவனே எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வான் என்ற தீவிர நம்பிக்கையுடன் யார் அவனே அணுகுகிருர்களோ அவர்களுக்கு அவனுடைய .துணே நிச்சயமாகக் கிடைக்கும்.