பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் * 405 'யேலால் சரண் ஒன்றில்லை என்று புகும் அன்பர் களுக்கு இறைவன் தன் கருணையை ஒளிக்கமாட்டான். இந்த எண்ணங்களே எல்லாம் கொண்ட அன்பர் முருகனிடத்தில் விண்ணப்பித்துக் கொள்கிருர். உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்; பின்னை ஒருவரையான் பின்செல்லேன். தன்னை நம்பினவர்களுக்கு அருள் செய்து துன்பத்தை நீக்கும் பேராற்றல் உடையவன் முருகன். யாரேனும் ஒருவர் நமக்கு உதவி செய்தால், கைகொடுத்து உதவின்ை’ என்று சொல்கிருேம். ஒருவன் பலத்திலுைம் பிறவற்ருலும் சிறந்து கின்ருல், 'அவன் கை ஓங்கி நிற்கிறது என்று சொல்கிருேம், செயல்களேக் காட்டுவதற்குக் கை ஓர் அடையாளம், ஆற்றல் இல்லாதவனேக் கையாலாகாதவன் என்று சொல்லும் வழக்கும் இதனை அறிவிக்கும். நாம் இரண்டு கைகளை உடையவர்களாக இருக்கிருேம். நம்மினும் பல மடங்கு ஆற்றல் பெற்ற தெய்வங்களுக்கு கான்கு கைகள் இருப்பதைப் பார்க்கிருேம். கைகள் ஆற்றலுக்கு அடையாளம். ஆதலின் ஆற்றல் மிக்க தெய்வங்களின் திருவுருவங்களில் அந்தக் கோலத்தைக் காண்கிருேம். - - முருகனுே பன்னிரண்டு திருக்கரங்களே உடையவன். ஆறு திருமுகங்களைப் பெற்றவன் அவன்; நான்கு திசை களேயும் மேலும் கீழும் ஆகிய இரண்டையும் சேர்த்தால் ஆறு திசைகளாகின்றன. முருகன் அந்த ஆறு திசை களிலும் கண் ஒட்டத்தைச் செலுத்தும் ஆறு முகங்களே உடையவன். எங்கே எது விகழ்ந்தாலும் அவனுடைய கண் பார்வைக்கு அகப்படாமல் இருக்க முடியாது என்பதையே இது காட்டும். அதுபோலவே தன்னுடைய திருவருளில் கம்பிக்கை வைத்துத் தன்ன அண்டு