பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:28 திருமுருகாற்றுப்படை விளககம் கிருன், அவனேக் கூட்டிக்கொண்டு வா. பிழை இன்னது என்று சொல்கிறேன்' என்று சொன்னர். நக்கீரர் பெரும்புலவர். பல அருமையான நூல்களே எல்லாம் இயற்றியவர். இறைவனிடம் பக்தி உடையவர். ஆனலும் இப்போது அவருடைய இயற்கையான கிலே மாறியிருந்தது. யாரோ ஒருவன் நாம் பெருக பரிசைப் பெறுவதா? என்று அவரது உள்ளம் தீய்ந்துகொண் டிருந்தது. ஆகையால் பாட்டு கன்ருக இருந்தாலும் அதனேக் கவனிக்காமல் பிழையே கண்டார். பாண்டியன் உள்ளத்துக்கே இனிமை தந்த அந்தப் பாட்டு, புலவர் உள்ளத்துக்கும் இனிமை தருவது இயல்பு. ஆனல் பொருமை உள்ளம் மகிழ்ச்சி கொள்வதைத் தடுத்தது. அவர் உள்ளம் நல்லதுதான். அதன்மேலே பொருமை யென்னும் புழுதி படர்ந்திருந்தது. அதனல் வெளியே சினத்தோடு பேசியது. இந்த கிலேயைப் பழைய திருவிளையாடற் புராணத்தை இயற்றிய பெரும்பற்றப் புலியூர் நம்பி ஒரு பாட்டில் அழகாக எடுத்துக் காட்டுகிருர். பொற்புறும் அவனைக் கண்டு பொருமையால் இருந்த கீரன் சொற்பொருள் அறியாப் பார்ப்பான், நீஇதைச் சொல்லித் தந்த நற்கவிப் புலவன் தன்னக் கொண்டுவா நாடி, உன்றன் முற்கவி தைக்குக் குற்றம் உண்டுபோ எனமு னிந்தான்' என்று நக்கீரர் கூறியதாக அவர் பாடுகிருர். நக்கீரர் சொல்கிற வார்த்தையில் அவருடைய கோபம் புலப்படு கிறது.