பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் - 407 அடுத்தபடி முருகப் பெருமானுடைய திருக்கையில் விளங்கும் வேலின் ஞாபகம் வருகிறது. பேராற்றல் உடைய முருகனுடைய கையில் ஞானசக்தியாகிய வேல் விளங்கு கிறது. புறப் பகையாகிய அசுரர்களேயும் அகப்பகையாகிய ஆசுர சம்பத்துக்களையும் அடியோடு ஒழிக்கும் கருவியாக நிற்பது முருகன் கைவேல். அவனுடைய பேராற்றலேப் பன்னிரு கைகளும் வேலாயுதமும் கன்கு விளக்குகின்றன. இவற்றை உடையவனே நம்பில்ை பிறகு வேறு யாரிடம் செல்லவேண்டும்? வானேர்களுக்கு உண்டாகிய கொடிய வினேயைத் தீர்த்து அருள் செய்த முருகனே நம்பினவர் களுக்கு வேறு ஒருவனிடம் சென்று கிற்க வேண்டிய அவசியமே இராது. - இந்தக் கருத்துக்களே எல்லாம் மனத்தில் கொண்ட அன்பர் அவற்றை வைத்துப் பாடுகிருர். உன்னை ஒழிய ஒருவரையும் கம்புகிலேன், பின்னை ஒருவரையான் பின்செல்லேன்:-பன்னிருகைக் கோலப்பா வாளுேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே! (உன்னேத் தவிர வேறு யாரையும் எனக்குத் துணையாக கம்ப மாட்டேன்; வேறு ஒருவரை அடியேன் பின்னின்று வழிபட மாட்டேன்; பன்னிரண்டு திருக்கரங்களையுடைய அழகுக் கோலத்தைப் பெற்ற முருகனே, தேவர்களுடைய கொடுமையான பாவத்தைப் போக்கி, அவர்களுக்கு கலம் செய்தருளும் வேலாயுதப் பெருமானே, திருச்செக்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! - கோல அப்பா என்பது தொகுத்தல் விகாரத்தால் கோலப்பா என்று ஆயிற்று. கொடிய வினே என்பது அவர் கள் பட்ட பரிபவத்துக்கு மூல காரணத்தைச் சொன்னபடி, செந்தி-திருச்செந்தூர், முருகப் பெருமான் குரனேடு போர் செய்து வென்ற பிறகு வெற்றி மாலே குடி அபிஷேகம்