பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 திருமுருகாற்றுப்படை விளக்கம் செய்து கொண்ட இடம் திருச்செந்துார். அதனல் ஜயந்தி என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே செக்தி என்று ஆயிற்று. அது பின்பு செந்தில், செந்துார் என மருவி வந்தது.1 6 திருநாமப் பயன் அடியவர்களுக்கு உதவி செய்வதற்கு முந்துபவன் முருகன். அவன் 'அடியார்க்கு நல்ல பெருமாள்'; "பக்தருக்கு வாய்த்த பெருமாள்'; தன் அடியார்கள் வேண்டி யவற்றை வேண்டிய போது வேண்டியவாறே கல்குபவன். அவர்களுடைய இன்னலைப் போக்கி கன்னலம் வழங்க அவன் எப்போதும் காத திருக்கிருன். அடியவர்கள் முருகனுடைய திருவுருவத்தைத் தியா னித்து அவன் திருநாமத்தைச் சொல்லி அவனே வழிபட்டு இன்பம் காணுகிறவர்கள். அவனுடைய திருநாமத்தை இடைவிடாது சொல்கிறவர்கள் இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் முருகா, முருகா!' என்று சொல்கிற வர்கள். வழுக்கி விழுந்தாலும் அவனுடைய திருநாமத் தையே சொல்வார்கள். 'வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன்மறு மாற்றம்." பன்முறை சொல்வதை ஒதுதல் என்பர். முருகனுடைய திருகாமத்தைப் பலமுறை சொல்வதில் அன்பர்கள் இன்பம் காணுவார்கள். வேதத்தை ஒதுவது போலவும் தோத்தி ரங்களே ஒதுவது போலவும் அடுத்தடுத்து முருகா, முருகா என்று சொல்லி அதல்ை காவில் தேன் ஊறியது போன்ற இன்பத்தைப் பெறுவார்கள். உள்ளத்தில் முறுகிய அன்பு இருக்குமானல் இறைவனுடைய திருகாமம் சொல்லச்