பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 திருமுருகாற்றுப்படை விளக்கம் பூட்டும் அடையாளங்கள். அவற்றையே நாம் வேண்டிய காலங்களில் வேண்டிய இடங்களில் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தாலும் அவை இறைவனுடைய தெய்விகத் திருவுருவத்தின் பிரதிநிதிகள். திருகாமம் அத்தகையதன்று. அது வேறு ஒன்றி ஆணுடைய பிரதிநிதி அன்று. எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் முருகா என்ற திருகாமத்தை உச்சரிக்கலாம். அவனுடைய திரு.காமத்தின் படமோ, கிழலோ அன்று அது. சாட்சாத் அவனுடைய திருகாமமே அது. ஆகவே இறைவன் திருவுருவத்தைவிட அவன் திரு.காமம் நம்மிடம் கேரே வந்து காவில் கிற்கிறது; எந்தச் சமயத்திலும் எந்த, இடத்திலும் காம் அன்புடன் இயம்பும்படி அமைந்திருக் கிறது. இந்தக் காரணத்தினல் அடியவர்கள் முருக காமத்தை, காவால் அடிக்கடி உச்சரிக்கிரு.ர்கள். அதில் இன்பம் காண்கிருர்கள். அவர்கள் துன்புற்ற போது முருகா என்ருல் ஆறுதல் பிறக்கிறது. இன்புறும்போது முருகா என்ருல் அந்த இன்பம் மிகுதியாகிறது வழி கடக்கும் போது முருகா என்ருல் வழித் துணை பெற்றது போன்ற தைரியம் உண்டாகிறது. - முருகா என்று சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டு இன்பம் காணுகிறவர்களுக்கு முருகன் அருள்புரிய முந்து வான். அந்தக் குரல் அன்பருடைய இதயகமலத்தி லிருந்து எழுவது என்பதை அவன் நன்கு அறிவான். நுனி நாக்கினல் சம்பிரதாயத்துக்குச் சொல்லி அவனே எமாற்ற முடியாது. காணுமல் போன தன் கன்றுக் குட்டியைக் கண்டபோது 'அம்மா என்று தாய்ப் பசுவின் அடி வயிற்றிலிருந்து வருகிற ஒலிபோல, அன்பர்களின் இதயத்திலிருந்து திருநாம ஒலி எழும்பும்,